வேலூர் சத்துவாச்சாரி காவல்நிலையம் எதிரே உதிரிபாகங்கள் ஏற்றி சென்ற மினிவேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து

*தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

வேலூர் : வேலூர் சத்துவாச்சாரி காவல்நிலையம் எதிரே உதரிபாகங்கள் ஏற்றி சென்ற மினிவேன் தலைகீழாக கவிழ்ந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெங்களூரில் இருந்து சென்னைக்கு வாகன உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு மினிவேன் நேற்று காலை 10.30 மணியளவில் வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. சத்துவாச்சாரி காவல்நிலையம் எதிரே சென்று கொண்டு இருந்தபோது மினிவேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இடது பக்கத்தில் சென்டர் மீடியன் தடுப்பு மீது மோதி சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது.

இதனால் சாலையில் டீசல் டேங்க், ஆயில் டேங்க் உடைப்பு ஏற்பட்டு கொட்டியது. மேலும் லேசான காயத்துடன் டிரைவர் உயிர்தப்பினார். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சத்துவாச்சாரி போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை நிறுத்தினர். மேலும் கவிழ்ந்து கிடந்த மினிவேனை கிரேன் மூலம் அகற்றினர். தொடர்ந்து சாலையில் கொட்டி இருந்த டீசல் மற்றும் ஆயிலை அகற்றினர். அரைமணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்துக்கு அனுமதித்தனர்.

The post வேலூர் சத்துவாச்சாரி காவல்நிலையம் எதிரே உதிரிபாகங்கள் ஏற்றி சென்ற மினிவேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Related Stories: