‘நம்பர் ஒன் எனது கேரளம்’ கண்காட்சி

பாலக்காடு, ஏப். 11: பாலக்காடு நகராட்சி இந்திராகாந்தி ஸ்டேடியம் மைதானத்தில் ‘‘நம்பர் ஒன் எனது கேரளம்’’ என்ற பெயரில் கண்காட்சி விற்பனை மேளா ஏப்.9ம் தேதி துவங்கியது.

இக்கண்காட்சி ஏப். 15ம் தேதி வரை நடக்கிறது. இந்த கண்காட்சியை கேரள மின்சார துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு கேரள உள்ளாட்சி அமைச்சர் ராஜேஷ் தலைமை தாங்கினார். கண்காட்சியில் காய்கறிகள், மளிகை பொருட்கள், கைவினை பொருட்கள், குழந்தைகள் பூங்கா, தொழில்மேளா, எலக்ட்ரிக் வாகனம், சார்ஜிங் ஸ்டேஷன், இ-சேவை மையம், நாட்டுப்புற கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சி, கேரளாவின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இதை முன்னிட்டு பாலக்காடு நகராட்சியில் நடந்த பிரசார ஊர்வலத்தில் சிறுவர்களின் ஸ்கேட்ரிங், பெரியவர்களின் சைக்கிள் பேரணி, கேரளாவின் பாரம்பரிய கலைகள், சிலம்பாட்டம் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இந்த கலைநிகழ்ச்சிகளை மக்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியை பாலக்காடு மாவட்ட கலெக்டர் சித்ரா பலூன்கள் பறக்கவிட்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

The post ‘நம்பர் ஒன் எனது கேரளம்’ கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: