இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேசிய அங்கீகாரம் ரத்து: தேசிய கட்சியானது ஆம் ஆத்மி

டெல்லி: இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேசிய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சி அந்தஸ்தை பெற்றது. கட்சி தொடங்கிய 10 ஆண்டுகளில் தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற்றுள்ளது ஆம் ஆத்மி. அதே சமயம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தேசிய கட்சி எனும் அங்கீகாரத்தை இழந்தன.

இதேபோல் புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வழங்கப்பட்ட மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு 3 மாநிலங்களில் குறைந்தபட்சம் 2 மக்களவை தொகுதிகளை கொண்டுள்ள கட்சி, 4 மாநிலங்களில் நடந்த பொதுத்தேர்தலில் குறைந்தபட்சம் 6% வாக்குகளைப் பெற்ற கட்சிகளுக்கு தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கட்சி அந்தஸ்து குறித்து ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கடந்த வாரம் கர்நாடக உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடதக்கது.

தற்போது பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஎம், பகுஜன் சமாஜ், என்.பி.பி. ஆகிய கட்சிகள் தேசிய கட்சிகளாக உள்ளன. டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி பெரும் பெரும்பான்மையுடன் – மிகப் பெரிய வாக்குப் பங்குகளுடன் ஆட்சியில் உள்ளது . மேலும் மார்ச் மாதம் நடைபெற்ற கோவா சட்டமன்றத் தேர்தலில் 6.77% வாக்குகளைப் பெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலில் அக்கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது.

The post இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேசிய அங்கீகாரம் ரத்து: தேசிய கட்சியானது ஆம் ஆத்மி appeared first on Dinakaran.

Related Stories: