கொரோனா அதிகரித்து வரும் நிலையில், மாநில மருத்துவ அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்

சென்னை: கொரோனா அதிகரித்து வரும் நிலையில், மாநில மருத்துவ அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து காணொளி முறையில் மாநில அமைச்சர்கள், சுகாதார செயலாளர்கள், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்த இருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு 1500 என்று இருந்து தொற்றின் எண்ணிக்கை ஒட்டுமொத்த தேசத்தில் நேற்று, இன்று 5000 கடந்துள்ளது. ஒவ்வொரு நாலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. இதன் காரணமாக மாநில மருத்துவ அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

குறிப்பாக கண்ணொளி முறையில் அமைச்சர்கள் சுகாதாரத்துறை செயலாளர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். ஏற்கனவே பொது இடங்களுக்கு செல்லும் போது தவறாமல் முகக்கவசம் அணியவேண்டும் அறிவுறுத்தல் தொடர்ச்சியாக கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

அப்படி இருந்தும் கூட எல்லாரும் அதை கடைபிடிக்காதது காரணமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் மாநில மருத்துவ அமைச்சர்களுடன், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

The post கொரோனா அதிகரித்து வரும் நிலையில், மாநில மருத்துவ அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: