கோயில் அன்னதானத்திற்கு நன்கொடை வழங்கலாம்

இளையான்குடி, ஏப்.6: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாள் திருவிழாவான பங்குனி பொங்கல் விழா நேற்று கோயிலில் சிறப்பாக கொன்டாடப்பட்டது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில், பக்தர்கள் பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு, முந்திரி, உலர் திராட்சை மற்றும் ஏலக்காய் கலந்து பொங்கல் வைத்து முத்துமாரியம்மனுக்கு படைத்தனர். திருவிழா பற்றி பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செட்டியார் கூறியதாவது,‘‘ தாயமங்கலம் முத்துமாரியம்மன், வேண்டுவோர்க்கு வேண்டிய வரம் தருவார். மக்களுக்கு பல அதிசயங்களை நிகழ்த்தி, நோயற்ற வாழ்வை தந்து அருள்பாலிக்கிறார். கையெடுத்து கும்பிட்டால் கஷ்டங்கள் அனைத்தும் பறந்தோடும். ஏழை மக்களின் பசி தீர கோயிலில் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. அன்னதானத்திற்கு இயன்றவர்கள் தாராளமாக நிதியுதவி செய்ய அன்போடு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

The post கோயில் அன்னதானத்திற்கு நன்கொடை வழங்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: