முருகன்கோயி்ல்களில் பங்குனி உத்திரவிழா, பவுர்ணமி விழா: கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்

கரூர், ஏப். 6: கரூர் கல்யாண பசுபதீஸ்வரா கோயிலில் பங்குனி உத்தர திருவிழாவினை முன்னிட்டு காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஆண்டுதோறும் கரூர் அலங்காரவல்லி, சவுந்திரநாயகி உடனாகிய கல்யாண பசுபதீஸ்வரா சுவாமி கோயிலில் பங்குனி உத்தர திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான விழா மார்ச் 27ம் தேதி துவங்கி ஏப்ரல் 9ம் தேதி வரை நடக்கிறது. இதனடிப்படையில், விழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி மார்ச் 28ம் தேதி அன்று நடந்தது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி ஏப்ரல் 3ம் தேதியும் நடந்தது.

மற்றொரு முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட நிகழ்வு நேற்று காலை நடந்தது. கோயில் வளாகத்தை சுற்றிலும் நடைபெற்ற இந்த திருத்தேரோட்டத்தை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, சுவாமிகளுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தது, பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் ஜெயதேவி, செயல் அலுவலர் சரவணன் ஆகியோர் செய்துள்ளனர்.

The post முருகன்கோயி்ல்களில் பங்குனி உத்திரவிழா, பவுர்ணமி விழா: கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: