சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக அதிகரிப்பு: சங்க கூட்டமைப்பு வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் பள்ளி சத்துணவு சமையலர், உதவியாளர், அங்கன்வாடிகளில் பணியாற்றும் உதவியாளர்களின் பணிக்காலத்தை 58 வயதில் இருந்து 60 வயதாக நீட்டித்து அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. நீண்ட நாட்கள் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றியுள்ளார்.  சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் பணியாளர்கள் பணிக்காலத்தில் இறந்தால் அவர்களின் குடும்பங்களில் வாரிசுகளுக்கு பணி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஆண் வாரிசுகளுக்கான பணி நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  மீண்டும் அதனை பரிசீலனை செய்து ஆண் வாரிசுகளுக்கும் பணி வழங்க வேண்டும். வருகிற நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் காலி பணியிடங்களால் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள்  ஐந்துக்கும் மேற்பட்ட  மையங்களில் பணி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தோம். அந்த காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்காகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழகம் முழுவதும் சுமார் 49,000 காலி பணியிடங்கள் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….

The post சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக அதிகரிப்பு: சங்க கூட்டமைப்பு வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: