ஆண்டிபட்டி பகுதியில் தொடர் மழையால் சாகுபடிக்கு தயாராகும் நிலங்கள்

ஆண்டிபட்டி:  ஆண்டிபட்டி பகுதியில் தொடர் மழையால் சாகுபடிக்கு நிலங்களை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டிபட்டி பகுதியில் உள்ள பிச்சம்பட்டி, ஆசாரிபட்டி, முத்துசங்கிலிபட்டி, தெப்பம்பட்டி, வேலப்பர்கோவில் பகுதி, புள்ளிமான் கோம்பை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் பெய்து வருகிறது. இப்பகுதியில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டிய கிராமங்களில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு கை கொடுக்கவில்லை. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், விவசாயிகள் தங்களது நிலத்தை சாகுபடிக்காக உழவு செய்து தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறுகியகால பயிர்களான அவரை, சீனி அவரைக்காய் உள்ளிட்ட பல்வேறு தோட்டப்பயிர்களும், கம்பு, சோளம், கேழ்வரகு மற்றும் சிறுதானிய பயிர்கள் போன்ற மானாவாரிய பயிர்களும் பயிரிடுவதற்கு விவசாயிகள் நிலங்களை தயார்படுத்தி வருகின்றனர்….

The post ஆண்டிபட்டி பகுதியில் தொடர் மழையால் சாகுபடிக்கு தயாராகும் நிலங்கள் appeared first on Dinakaran.

Related Stories: