நாகமலை புதுக்கோட்டையில் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருப்பரங்குன்றம், மார்ச் 28: மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டையில் உள்ள  சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் துவங்கிய இவ்விழாவில் யாகசாலை பூ, மண்டல பூஜை, கும்ப பூஜைகள் நடைபெற்றன. நேற்று சிவாச்சாரியார்களால் புனித நீர் கொண்டு வரப்பட்ட கும்பங்கள் யாகசாலையில் இருந்து புறப்பாடானது. தொடர்ந்து கோயில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

பின்னர் விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை, சரஸ்வதி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: