5 பேர் மீது வழக்கு பதிவு ரெட்டியபட்டியில் 200 மீட்டர் வடிகால் வசதி அமைக்க வேண்டும் கடவூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

தோகைமலை,: ரெட்டியபட்டியில் 200 மீட்டர் வடிகால் வசதி அமைக்க வேண்டும் என்று கடவூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரணக் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. கூட்ட அரங்கில் நடந்த இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு துணைத்தலைவர் கைலாசம், ஒன்றிய ஆனையர்கள் ராஜேந்திரன், ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்காவில் இருந்து கடவூர் தாலுகா பிரிக்கப்பட்டு சுமார் 11 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

கடவூர் தாலுக்காவில் வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம் மற்றும் கருவூலம் ஆகிய அனைத்து அரசுத்துறை அலுவலகங்களுக்கும் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. கடவூர் தாலுக்காவில் இருந்து குளித்தலை நீதி மன்றம் சுமார் 65 கி.மீ தூரத்தில் உள்ளது. இதனால் கடவூர் தாலுக்கா பொதுமக்கள் நீதி மன்றம் சென்று வருவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு கடவூர் தாலுகாவிற்காக தனி நீதி மன்றம் அமைக்க உத்தரவு பிறப்பித்தது. ஆகவே தற்போது குளித்தலை நீதி மன்றம் வளாகத்தில் இயங்கி வரும் கடவூர் தாலுகாவிற்கான நீதி மன்றத்தை கடவூர் தாலுகாவில் இயங்க நடவடிக்கை எடுக்கமாறு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் வரவு செலவு உள்பட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து ஒன்றிய குழு தலைவர் செல்வராஜிடம் ஒன்றிய கவுன்சிலர் ராமூர்த்தி கோரிக்கை மனு அளித்தார். அதில் தாசில்ரெட்டிபட்டி மாயானத்திற்கு செல்லும் சாலையில் 110 மீட்டர் தூரத்திற்கு சிமெண்ட் சாலை அமைத்தல், இதே கிராமத்தில் பழுதான நிலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியை அகற்றிவிட்டு புதியதாக 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி அமைக்க வேண்டும். மசாலூர் தெற்கு களத்திற்கு 1500 மீட்டர் பைப்லைன் அமைக்க வேண்டும். ரெட்டியபட்டியில் 200 மீட்டர் வடிகால் வசதி அமைக்க வேண்டும். குளக்காரன்பட்டி மந்தை முதல் ஆதிதிராவிடர் காலனி வழியாக மணப்பாறை மெயின்ரோடு வரை புதிய தார்சாலை அமைக்க வேண்டும். இதே ஆதிதிராவிடர் தெருவிற்கு 200 மீட்டர் வடிகால் வசதி அமைக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட ஒன்றிய குழு தலைவர் செல்வராஜ், சம்மந்தப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் தவமணி, ரவிசந்திரன், மகாலட்சுமி, கிருஷ்ணகுமாரி, நிர்மலா, கோமதி, தனம், சுந்தரபாண்டியன், முருகன், ராமமூர்த்தி, சரோஜா, மலையாண்டி உள்பட துணை வட்டார வயர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: