தோகைமலையில் பொதுஇடத்தில் மது அருந்திய 3 பேர் மீது வழக்கு

தோகைமலை, ஜன, 3: கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே மதுபானங்கள் அருந்துவதாக அப்பகுதி பொதுமக்கள் தோகைமலை போலீசாருக்கு புகாரளித்தனர். தகவலறிந்த தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி மாவட்டம் மணப்பாறை பூசாரிபட்டியை சேர்ந்தவர் மணிவேல் (37). மற்றும் தோகைமலை திருமாணிக்கம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (28).

ஆகியோர் தோகைமலை தனியார் கல்லூரி அருகில் பொது இடத்தில் மது அருந்திக்கொண்டிருந்தனர். இதேபோல் நாடகாப்பட்டி பிரிவு ரோடு அருகே உள்ள பொது இடத்தில் பாப்பகாப்பட்டியை சேர்ந்த சந்திரன் (26). மது அருந்திக் கொண்டு இருந்து உள்ளார். இதையடுத்து மணிவேல், சதீஷ்குமார் சந்திரன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Related Stories: