கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக மாதம்தோறும் ஒளிபரப்பப்படும், சிறார் திரைப்படம், பள்ளி நூலகங்களில் மாணவர்கள் வாசிக்கும் புத்தகங்கள் சார்ந்த திறனாய்வு செய்தல், பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு வெளியிடும் சிறார் மாத இதழான தேன் சிட்டு இதழில் வரும் அறிவுசார் தகவல்கள் சார்ந்த வினாடி -வினா போட்டி ஆகியவற்றிற்கான போட்டிகளை மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. வட்டார அளவிலான சிறார் திரைப்படமான 101 சோத்தியங்கள் போட்டி கந்தர்வகோட்டை வட்டார வள மையத்தில் நடைபெற்றது. இப்போட்டிக்கான ஏற்பாட்டினை வட்டார கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி, நரசிம்மன் ஆகியோர் செய்திருந்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.
