சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருக்கருக்காவூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (46). இவர் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு இனிப்பகம் மற்றும் பேக்கரியில் கடந்த மூன்று மாதமாக மாஸ்டராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு பணிகளை முடித்துவிட்டு தனது சம்பளத்தை வாங்குவதற்காக பேக்கரிக்கு சென்றுள்ளார். அப்போது பேக்கரி கடையின் ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து இருந்ததாக தெரிகிறது. இதனை அறியாத சங்கர் ஷட்டரை தொட்ட போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார்.
