சிவகாசி அருகே பஞ்சாயத்து அலுவலகம் முற்றுகை

சிவகாசி, மார்ச் 21: பஞ்சாயத்து இடத்தில் தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விஸ்வநத்தம் பஞ்சாயத்து அலுவலகம் நேற்று முற்றுகையிடப்படடது. சிவகாசி அருகே விஸ்வநத்தம் பஞ்சாயத்து சிவகாமிபுரம் ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 7 ஏக்கர் புறம்போக்கு நிலம் இருந்தது. இதில் ஆதிதிராவிடர் மற்றம் பழங்குடியினருக்கு இலவச பட்டா வழங்கும் பொருட்டு 186 நபர்களுக்கு வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 10 சதவீதம் (50 சென்ட் இடம்) பஞ்சாயத்து நிர்வாகத்தின் பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொது உபயோகத்திற்கு ஒதுக்கப்பட்ட 50 சென்ட் இடத்தையும் தற்போது கூடுதலாக 10 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குடிநீர் தொட்டிகள், சமுதாயக்கூடங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட 50 சென்ட் இடத்தில் தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நேற்று விஸ்வநத்தம் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஒன்றிய திமுக கவுன்சிலர் சின்னதம்பி தலைமையில் பஞ்சாயத்து தலைவர் சக்திவேல்நாகராஜிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று ஏற்கனவே கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளதாக இளைஞர்களிடம் பஞ்சாயத்து தலைவர் தெரிவித்தார்.

Related Stories: