தமிழ் பல்கலைக்கழக்தில் பெண்கள் நலன், சட்ட அதிகாரம் குறித்த தேசிய கருத்தரங்கம்

தஞ்சை: தமிழ்ப் பல்கலைக்கழக சமூக அறிவியல் துறை சார்பில் பெண்கள் நலன்களும் சட்ட அதிகாரங்களும் குறித்த தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திருவள்ளுவன் தலைமை வகித்து பேசுகையில், மாணவர்களின் தமிழ்ப் பண்பாடுடன் கூடிய ஆடை மற்றும் ஒழுக்க நெறிமுறைகளின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார். தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி கருத்தரங்கினை தொடங்கி வைத்து பேசுகையில், ஆண்,பெண் உடை அலங்காரத்தைவிட மன அழகுதான் முக்கியம். குறிப்பாக பெண்கள் தங்கள் மனநலம் மற்றும் உடல்நலத்தைப் பேணுவதில் கவனம் செலுத்தவேண்டும் என்றார். பேராசிரியர் சி.தியாகராஜன், பதிவாளர் (பொ) தியாகராஜன் வாழ்த்தி பேசினார்.

நிகழ்வில் தஞ்சை ஜனசேவா பவன், செயலாளர் சியாமளா சத்தியசீலனுக்கு பெண்ணியம் பேணும் பெருந்தகை” என்ற விருதும், கில்டு ஆப் சர்வீஸ், பொது செயலாளர் சுந்தரி சுப்பிரமணியனுக்கு “சிறார் சீர் செம்மல்” என்ற விருதும், இன்னர் வீல் கிளப் முன்னாள் மாவட்ட தலைவர் விஜயா சுவாமிநாதனுக்கு “சமூகச் செயல் தீரர் விருதினையும் துணைவேந்தர் திருவள்ளுவன் வழங்கினார். யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் மூலம் மன அழுத்த மேலாண்மை எனும் பொருண்மையில் மருத்துவர் ராதாமணி, இன்றைய சூழலில் இணையக் குற்றமும் சட்ட உதவியும் என்ற தலைப்பில் சுஷ்மிதா கிஸோர்குமார் சிங்கும், விளிம்புநிலைப் பெண்களின் அதிகாரப் பரவலாக்கம் என்ற தலைப்பில் புதுச்சேரி சகோதரன் சமூக நலன் மேம்பாடு நிறுவனம் இயக்குனர் சீத்தள் உரையாற்றினர். மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் உஷா சான்றிதழ்களை வழங்கினார். இணைப்பேராசிரியர் சங்கீதா வரவேற்றார். உதவி பேராசிரியர் அறிவானந்தன் நன்றி கூறினார். பல்வேறு பல்கலைக்கழகத்திலிருந்தும் மற்றும் கல்லுாரிகளிலிருந்தும் 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

Related Stories: