அரசு தொகுப்பு வீடு இடிந்து விழுந்து 10ம் வகுப்பு மாணவன் காயம்

திருவாரூர், மார்ச் 19: திருவாரூர் அருகே அரசு தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் 10ம் வகுப்பு மாணவன் காயமடைந்து அரசு மருத் துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். திருவாரூர் அடுத்த புலிவலம் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் பாஸ்கரன் (47). இவர் தனியார் காஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரேமா என்கிற மனைவியும், இலக்கியா (18) என்ற மகளும், ராகுல் (17), பிரவீன் (16) என 2 மகன்களும் உள்ளனர். இதில் பிரவீன் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் அனைவரும் கடந்த 1980 ஆண்டு கட்டப்பட்ட அரசு தொகுப்பு வீட்டில் வசித்து வருகின் றனர்.

இந்நிலையில், அரசு பொது தேர்வு எழுதும் பிரவீன் மற்றும் ராகுல் நேற்று முன்தினம் இரவு வீட்டில் படித்து கொண்டு இருந்த போது எதிர்பாராத வித மாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் பிரவீன் தலையில் காயம் அடைந்தார். தொடர்ந்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திரு வாரூர் அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். இதுகுறித்து மாணவனின் தந்தை பாஸ்கரன் கூறுகையில், கடந்த 43 ஆண்டு களாக இந்த தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறோம். எங்கள் வீடு போன்று அருகில் உள்ள வீடுகளும் வலுவிழந்து உள்ளது. எனவே, அதிகாரிகள் வந்து நேரில் பார்வையிட்டு பழைய வீடுகளை அகற்றி புதிதாக கட்டித்தர நடவடி க்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: