அரிமளத்தில் கோலாகலம் முத்துமாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம்

திருமயம், மார்ச் 19: அரிமளம் முத்துமாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் மார்க்கெட் பகுதியில் முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த கோயில் தேர் சக்கரங்கள் பழுதானதால் பழுதடைந்த மரச் சக்கரங்களை புதுப்பிக்க கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இதை அடுத்து திருச்சி பிஎச்இஎல் நிறுவனத்தில் பழுதடைந்த மரச்சக்கரங்களுக்கு பதிலாக இரும்பால் ஆன புதிய சக்கரங்கள் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன் தினம் பழுதடைந்த மரச் சக்கரங்கள் நீக்கப்பட்டு புதிய சக்கரங்கள் முத்துமாரியம்மன் கோயில் தேரில் பொருத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர். முன்னதாக தேர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தேரில் அம்மன் சிலை வைத்து சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் நடைபெற்ற வெள்ளோட்ட நிகழ்ச்சியானது கோயில் வளாகத்தில் தொடங்கி மார்க்கெட் ரோடு, மீனாட்சிபுரம் வீதி, அக்ரகாரம் வீதி வழியாக தேர் வளம் வந்தது. இதனிடைய ஓரிரு வாரங்களில் நடைபெற இருக்கும் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி புதிய தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது அப்பகுதி பக்தர்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: