₹79 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

கடலூர், மார்ச் 18: கடலூரில் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ரூ.79 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன் முன்னிலை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா வரவேற்றார். கடலூர் ஐயப்பன் எம்எல்ஏ, மாநகர மேயர் சுந்தரி ராஜா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். துணை மேயர் தாமரைச்செல்வன் கருத்துரை வழங்கினார்.

 நிதியுதவி மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் இத்திட்டங்களுக்கு 2022- 23ம் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டதாரி அல்லாத 3 பயனாளிகளுக்கு தலா ரூ. 25,000/- வீதம் ரூ.75,000/-ம் 82 பட்டதாரி பயனாளிகளுக்கு தலா ரூ.50,000/- வீதம் ரூ.41,00,000/- மொத்தம் 85 பயனாளிகளுக்கு ரூ.41,75,000/-ம் 8 கிராம் வீதம் 85 பயனாளிகளுக்கு தங்க நாணயங்கள் ரூ.38,00,644/-ம் ஆக மொத்த மதிப்பு ரூ.79,75,644 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 5 பயனாளிகளுக்கு ரூ.50,000- வீதம் ரூ.2,50,000 வைப்புதொகை பத்திரம் வழங்கப்பட்டது. கண்காணிப்பாளர் சுமதி நன்றி கூறினார்.

Related Stories: