திருமருகல் அருகே நிலப்போர்வையில் கத்தரி சாகுபடி

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே கொத்தமங்கலம் கிராமத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் முதல் முறையாக முழு மான்யத்தில் சோதனை அடிப்படையில் நிலப்போர்வை வழங்கப்பட்டது.  அதனை விவசாயி தன்னுடைய வயலில் அமைத்து அதில் கத்தரி செடிகள் நடவு செய்துள்ளார். நிலப்போர்வை அமைத்து சாகுபடி செய்தால் களைகள் வளர்ச்சி குறையும். நீர் ஆவியாதல் குறையும். பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறையும். மகசூல் அதிகரிக்கும் என உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து விவசாயிகள் மாற்று பயிராக நிலப்போர்வையின் கத்தரி சாகுபடி செய்தனர்.

Related Stories: