வரும் தலைமுறையினர் நோயின்றி ஆரோக்கியமாக வாழ தமிழக அரசு தீவிர நடவடிக்கை

தஞ்சாவூர் : வரும் தலைமுறை நோயின்றி ஆரோக்கியமாக வாழ தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகள் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நேற்று தொடங்கி வைத்தார். அமைச்சர் பேசியதா வது: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகள் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் இன்று வழங்கப்பட்டது. தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் அனைத்து திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 2022-2023ம் நிதியாண்டின்படி தற்போது ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமணத்திற்கு 141 பயனாளிகளுக்கும். டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் கலப்பு திருமணத்திற்கு 22 பயனாளிகளுக்கும். அன்னை தெரசா ஆதரவற்றோர் திருமணத்திற்கு 17 பயனாளிகளுக்கும் மொத்தம் 180 பயனாளிகளுக்கு, ரூ.43,120 மதிப்புள்ள 8 கிராம் தங்க நாணயம், 180 பயனாளிகளுக்கு தொகை ரூ.77,61,600மும், நிதியுதவி தொகையாக 170 பட்டதாரி பயனாளிகளுக்கு ரூ.50,000 வீதம் ரூ.85,00,000மும், 10 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு ரூ.25,000 வீதம் ரூ.2,50,000மும் மொத்தம் ரூ.87,50,000 நிதியுதவி தொகை, ஆக மொத்தம் தொகை ரூ.1,65,11,500 தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி தொகையும் வழங்குவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் முன்னோடி திட்டமான “ஊட்டச்சத்தை உறுதிசெய்” திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை திட்டம்” தமிழக முதல்வரால் 21.05.2022 அன்று தொடங்கப்பட்டு அதனடிப்படையில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிய வழிவகை செய்யப்பட்டது. தமிழக முதல்வரால் பிப்ரவரி 28ம் தேதியன்று 0 மாதம் முதல் 6 மாதம் வரையிலான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை ஊட்டச்சத்து நிறைந்த குழந்தைகளாக்குவதற்காக.அக்குழந்தையின் தாய்மார்களுக்கு குடற்புழுநீக்கு மாத்திரை, நெய், பேரீட்சைபழம், புரதச்சத்துமாவு, கை துண்டு. கோப்பை மற்றும் இரும்புசத்து திரவம் ஆகியவை அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது, அதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்புடைய மருத்துவ துறை அலுவலர்கள் மற்றும் RBSK குழுவினருடன் ஆய்வு செய்யப்பட்டதில் 10 முதல் 6 வயது வரையுள்ள 6178 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டது.

அவற்றில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுவுள்ள குழந்தைகளுக்காக 1964 ஊட்டச்சத்து தொகுப்பு அடங்கிய பெட்டகம் பெறப்பட்டுள்ளது எனவே அக்குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் புதிதாக செறிவூட்டப்பட்ட நீல நிற பாக்கெட்டில் உள்ள வறுத்த கடலைமாவு, வறுத்த உளுத்தம்பருப்பு மாவு, வறுத்த வேர் கடலைமாவு, வறுத்த கோதுமை. வறுத்த சோயாமாவு சேர்க்கப்பட்ட சத்துமாவினை கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலுட்டும் தாய்மார்களுக்கும், இளம்சிவப்பு நிற பாக்கெட்டில் உள்ள சத்துமாவினை 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும். வெள்ளை நிற பாக்கெட்டில் வறுத்த நில கடலைமாவு. முலைகட்டிய கேழ்வரகு, வறுத்த கோதுமை மாவு, வெல்லத்தூள், வறுத்த சோய மாவு, தாதுஉப்புகள் மற்றும் வைட்டமின்கள் ஆகிய மூலப்பொருட்களுடன் ஏலக்காயும் சேர்க்கப்பட்ட சத்துமாவினை 2 வயது முதல் 6 வயது வரை உள்ள பயனாளிகளுக்கு நேற்று வழங்கப்பட்டது. வருகின்ற தலைமுறை நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கு அனைத்து நடவடிக்கையும் தமிழக அரசு மக்கள் நலன் கருதி செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட சமூக நல அலுவலர் அனுரா நடராஜமணி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: