சின்னமனூர் அருகே பள்ளி வகுப்பறை கட்டுமான பணிகள் எம்எல்ஏ நேரில் ஆய்வு

சின்னமனூர்: சின்னமனூர் அருகே உள்ள அபிபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. எனவே பள்ளிக்கு புதி வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் என கடந்த அதிமுக ஆட்சியில் அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த பள்ளியை கடந்தாண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து பள்ளிக்கு 8 புதிய வகுப்பறைகள், ஒரு லேபும் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் கடந்த சில மாதங்களாக புதிய கட்டிடம் கடடும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வகுப்பறைகள் தரமானதாக கட்ட வேண்டும் என அதிகாரியிடம் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது,தேனி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் குருஇளங்கோ, சின்னமனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: