தென்காசி, மார்ச் 15: தென்காசி மாவட்டத்தில் நேற்று 16 ஆயிரத்து 247 மாணவர்கள் பிளஸ் 1 தேர்வு எழுதினர். 541 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. பிளஸ்1 தேர்வு நேற்று துவங்கியது. தென்காசி மாவட்டத்தில் 16 ஆயிரத்து 788 மாணவ, மாணவிகள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக 64 தேர்வு மையங்கள் மாவட்டம் முழுவதும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என ஆயிரத்து 322பேர் தேர்வை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விண்ணப்பித்த 16 ஆயிரத்து 788 மாணவ, மாணவியரில் நேற்று 16 ஆயிரத்து 247 மாணவ- மாணவியர் தேர்வு எழுதினர். 541 பேர் தேர்வு எழுத வரவில்லை.
