தேனி: தேனி மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் 1 பொதுத் தேர்வினை 13 ஆயிரத்து 404 பேர் எழுதிய நிலையில் 1143 பேர் எழுதாமல் ஆப்சென்டாகினர். தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் பிளஸ் 2 தேர்வு தொடங்கியது. இத்தேர்வுகள் வருகிற ஏப்ரல் 3ம் தேதி முடிய உள்ளது. இந்நிலையில் நேற்று முதல் பிளஸ் 1 பொதுத் தேர்வும் தமிழகம் முழுவதும் தொடங்கியது. இப்பொதுத் தே்ாவு வருகிற ஏப்ரல் 4ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. தேனி மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வினை அரசு, அரசு நிதி உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளிகள், தனியார் சுயநிதி மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என 142 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்களும், பிரைவேட் தேர்வர்களுமாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, மாவட்ட அளவில் பள்ளிகளில் பயிலும் 7 ஆயிரத்து 183 மாணவர்கள், 7 ஆயிரத்து 175 மாணவியர் என மொத்தம் 14 ஆயிரத்து 358 பேரும், தனியாக 93 மாணவர்கள் மற்றும் 96 மாணவியர் என மொத்தம் 189 என மொத்தம் 14 ஆயிரத்து 547 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதற்காக 55 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று மொழிப்பாடம் முதல்தாள் தே்ாவு நடந்தது. இத்தேர்வினை 6 ஆயிரத்து 515 மாணவர்களும், 6 ஆயிரத்து 725 மாணவியர்களுமாக மொத்தம் 13 ஆயிரத்து 240 பேர் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களாக விண்ணப்பித்தவர்களில் 80 மாணவர்கள் மற்றும் 84 மாணவியர் என மொத்தம் 164 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 13 ஆயிரத்து 404 பேர் தேர்வு எழுதினர். நேற்று நடந்த தேர்வில், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களி் 668 மாணவர்கள், 450 மாணவியர் என மொத்தம் 1118 பேரும், தனித்தேர்வர்களாக விண்ணப்பித்த 13 மாணவர்கள், 12 மாணவியர் என மொத்தம் 25 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்டாகினர். மொத்தம் 1143 பேர் தேர் வு எழுதாமல் ஆப்சென்டாகினர்.