பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பரமக்குடி: பரமக்குடியில் பழங்குடியின மக்களுக்கு குடிமனை பட்டா, இனச்சான்று வழங்க கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பரமக்குடி வைகை ஆற்றுக்குள் காலங்காலமாக வசிக்கும் பழங்குடி மக்களுக்கு அரசே நீர் பிடிப்பு பகுதிகளில் வழங்கிய 23 ஒப்படைப்பு ஆணைய ரத்து செய்துவிட்டு மாற்று இடத்தில் உடனே இலவச பட்டா வழங்கிட வேண்டும். பரமகுடி தாலுகா வேந்தோணி ஊராட்சி லீலாவதி நகரில் வசிக்கும் குருவிக்காரர் பரமக்குடி நகராட்சி வைகை ஆறு பகுதியில் வசிக்கும் கணிக்கர், மலைக்குறவர், நரிக்குறவர் மற்றும் போகலூர் ஒன்றியம் சத்திரக்குடி சமத்துவபுரம் வெற்றி நகரில் வசிக்கும் கணிக்கர், பரமக்குடி தாலுகா பகுதியில் வசிக்கும் காட்டுநாயக்கர் இன மக்களுக்கு பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர் ராஜா, மாவட்ட அமைப்பாளர் முனியசாமி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: