மேலூர் அருகே சிவாலயத்தில் அஷ்டமி வழிபாடு

மேலூர்: மேலூர் அருகே சிவாலயத்தில் விவசாயம் செழித்தோங்கவும், மக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும் சிறப்பு பிராத்தனைகளுடன் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது. மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் அமைந்துள்ள  சங்கரலிங்கம்,  சங்கரநாராயணசுவாமி, கோமதியம்மாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நேற்று நடைபெற்றது. விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய் நொடியின்றி வாழவும் வேண்டி நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கால பைரவர் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பதினாறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பக்தர்கள் சிவ புராணம், கோளாறு பதிகம், தேவாரம், திருவாசகம் பதிகங்கள் பாராயணம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் ராஜேஷ் மற்றும் சங்கரநாராயணர் கோயில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: