குளிச்சப்பட்டு கிழக்கு தெருவில் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பை மீட்டுத்தர மக்கள் கோரிக்கை

தஞ்சாவூர்,: நீர் வழி பாதையை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இடத்தை மீட்டு தரக் கோரி குளிச்சப்பட்டு கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் குளிச்சப்பட்டு ஊராட்சி கிழக்கு தெருவில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவிற்கு செல்லகூடிய நீர்வழி பாதையை அருகில் உள்ள தெருவாசிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்நிலையில் அந்த பகுதியில் விவசாய பணிக்கு தண்ணீர் செல்லும் 7 அடி பாதை உள்ளது. இதனை ஆக்கிரமிப்பு செய்ததால் தண்ணீர் செல்லவழி இல்லாமல் விவசாயம் செய்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. இது சம்மந்தமாக பலமுறை பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இன்று வரை இல்லை. எனவே இந்த கோரிக்கையை ஏற்று மாவட்ட கலெக்டர் அந்த பகுதிக்கு நேராக சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

இதுகுறித்து இப்பகுதி விவசாயி முருகேசன் கூறியதாவது: இந்த பகுதியில் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்து வருகிறோம். இந்த ஆக்கிரமிப்பால் அங்கு விவசாயம் செய்ய முடியாமல் விளை நிலங்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகிறது. கடந்த 2 வருட காலமாக அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்து வருகிறோம். இந்நிலையில் இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை மீட்டு தருவதுடன் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: