கலெக்டர் தகவல் கோடை சீசன் துவங்க உள்ளதால் குட்டீஸ்களை குதூகலமாக்க பொழுதுபோக்கு ரயில் தயார்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் குழந்தைகள் பொழுது போக்குக்காக ரயில் சேவை தயார் நிலையில் உள்ளது. தஞ்சாவூர் பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை பழமைமாறாமல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த ஜனவரி 14ம் தேதி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் சீரிய நடவடிக்கையால் அங்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் 7டி தியேட்டர், அரிய வகை பறவைகள் பூங்கா, இசைக்கு ஏற்றபடி நடனமாடும் செயற்கை நீரூற்று, சரஸ்வதி மகால் நூலக காட்சியறை, பழங்கால சிற்பங்கள் காட்சியறை, நில அளவீட்டு துறை காட்சியறை உள்பட பல்வேறு காட்சிக்கூடங்கள் உள்ளன.

மேலும் இந்தக் கட்டிடத்தின் ஒவ்வொரு அறையிலும் தஞ்சாவூர் மாவட்டத்தின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் புவிசார் குறியீடு பெற்ற 10 பொருட்களும் மற்றும் பலவித பாரம்பரிய பொருட்கள் இடம் பெற்றுள்ளன. மாவட்டத்தின் சிறப்புகளை விளக்கும் தகவல் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளது. அங்கு தினமும் பொதுமக்கள் அதிக அளவில் வருகை புரிந்துள்ளனர். சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் பெரிய கோயிலுக்கு வரும் சுற்றலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு சென்று ரசித்து வருகிறார்கள். தற்போது அந்த அருங்காட்சியகத்தில் குழந்தைகளுக்காக ரயில் சேவை தொடங்க உள்ளது. இந்த ரயிலானது ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு தற்போது குழந்தைகளின் பயன்பாடிற்கு தயாராக உள்ளது. அந்த ரயிலானது பெரியகோவிலில் தொடங்கி ராஜாளி கிளி பூங்கா வழியாக அருங்காட்சியகம் வர உள்ளது.

Related Stories: