காரைக்காலில்  கைலாசநாத சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம்

காரைக்கால்,மார்ச் 14: காரைக்காலில் பிரசித்தி பெற்ற  சுந்தராம்பாள் சமேத கயிலாசநாதர் சுவாமி தேவஸ்தானம் ஆலயம் அமைந்துள்ளது. நிகழாண்டு பிரம்மோற்சவம் விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடைபெற்றது.

முன்னதாக பந்தல் காலுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பந்தக்கால் வெளிப் பிரகாரத்தில் வலம் வந்து ஆலய வாசலில் நடப்பட்டது. இதில் வரும் 26ம்தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தொடர்ந்து ஏப்ரல் 3ம் தேதி பெரிய தேரோட்டமும், 5ம் தேதி அம்மையார் ஐக்கிய விழாவும், 6ம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறும் என அறங்காவல் வாரியத்தினர் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் அறங்காவல் குழு தலைவர் வெற்றிசெல்வன், துணை தலைவர் புகழேந்தி, செயலாளர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: