நாகப்பட்டினம் கலெக்டர் அறிவுறுத்தல் நாகப்பட்டினம் மாவட்ட அளவில் நடந்த சதுரங்க போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

நாகப்பட்டினம்,மார்ச்14:  நாகப்பட்டினம் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் வேளாங்கண்ணி அருகே கருவேலங்கடையில் உள்ள செயிண்ட் மைக்கேல் அகாடமி பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடந்தது. மாவட்டத்தில் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 192 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு 7 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவிற்கு எம்.தர்ணிகா, டி. தருணிகா, ஆண்கள் பிரிவில் குகன், துரைமுருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

13 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் வைஷ்ணவி, ரூபித்ரா, ஆண்கள் பிரிவில் இன்பன், அஷ்வந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 15 வயதிற்கு உட்பட் பெண்கள் பிரிவில் ஸரிமதி, பிருந்தா, ஆண்கள் பிரிவில் ராகவன், பிரபாகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு செயின்ட் மைக்கேல் அகாடமி தலைவர் ஆல்பிரட்ஜான் வழங்கினார். நாகப்பட்டின சதுரங்க கழக செயலர் சுந்தர்ராஜ், துணைத் தலைவர் நாகராஜ், பள்ளி முதல்வர் சூசன்ஆல்பிரட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: