காஞ்சிபுரத்தில் நாணயவியல் கண்காட்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாணயவியல் கண்காட்சியை கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமை தாங்கி திறந்து வைத்தார். தமிழ்த்துறை தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.  கண்காட்சியில் கடந்த 1835ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை உள்ள நாணயங்கள், சேர, சோழ, பாண்டியர் மற்றும் விஜயநகர பேரரசர் காலத்து நாணயங்கள், நெகிழி பணம் மற்றும் நெகிழி நாணயங்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தபால் தலைகள், சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை உள்ள ஒரு ரூபாய் நோட்டு மற்றும் நாணயம், பழங்கால காசுகளான ஓட்டை காலணா, குதிரை காலணா, தம்பிடிக்காசு ஆகியவை உட்பட ஏராளமான நாணயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இக்கண்காட்சியை கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலரும் பார்வையிட்டனர். இந்நாணயங்கள் அனைத்தையும் கடந்த 20 ஆண்டுகளாக சேமித்து வைத்து கண்காட்சிக்கு உதவிய தொல்லியல் ஆய்வாளர் ஜவஹர் பாபு கல்லூரி நிர்வாகத்தால் கௌரவிக்கப்பட்டார். ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் அப்பாத்துரை, கணபதி ஆகியோர் செய்திருந்

தனர்.

Related Stories: