காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு லோக் அதாலத் நேற்று நடந்தது. தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல் படியும் காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா அறிவுறுத்தலின்பேரில், காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் சிறப்பு மோட்டார் வாகன விபத்து வழக்குகளை கையாளும் வகையில் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) இளங்கோவன் துவக்கி வைத்தார். வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், கூடுதல் சார்பு நீதிபதியுமான திருஞானசம்பந்தம் கலந்து கொண்டார். இதில், பேசிய மாவட்ட நீதிபதி (பொறுப்பு) இளங்கோவன் வழக்கமாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை லோக் அதாலத் நிகழ்வு நடைபெறும். அவ்வகையில் கடந்த நிகழ்வின்போது சுமார் ஒரு கோடியே 95 லட்சம் மதிப்பிலான இழப்பீடுகள் வழங்கப்பட்டது.
