கொடைக்கானல் ஏரியில் விடப்பட்டது 50 ஆயிரம் மீன் குஞ்சுகள்

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரியில் ஆண்டுதோறும் மீன்வளத்துறை சார்பில் ஆண்டுதோறும் மீன் குஞ்சுகள் விடப்படும்.  அதன்படி இந்த ஆண்டு ஏரியில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மீன்வளத்துறை துணை இயக்குனர் பிரபாவதி, உதவி இயக்குனர் சவுந்தர பாண்டியன், ஆய்வாளர் ஞானசுந்தரி, சார் ஆய்வாளர் பார்வதி மற்றும் மீன்வளத்துறை பணியாளர்கள் சுமார் 50,000 மீன் குஞ்சுகளை ஏரியில் விட்டனர். கொடைக்கானல் ஏரியில் கார் வகை மீன் குஞ்சுகள் விடப்பட்டதாகவும், இது ஏரி நீரில் நன்கு வளரக்கூடிய வகையை சார்ந்தது என்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: