விவசாயிகள் சங்கம் பிரச்சார இயக்கம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சிஐடியூ, விதொச சார்பில் பிரச்சாரம் நடந்தது.  விவசாய விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு ஆதார விலை தருவதாக ஒன்றிய அரசு அளித்த உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம், ஒய்வூதியம் ரூ.10000 வழங்க வேண்டும். ஒப்பந்த முறை ஒழிக்கப்பட்டு ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். பொதுத்துறையை தனியார் மயமாக்கும் மக்கள் விரோத செயலை நிறுத்த வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.5ல் டெல்லியில் பாராளுமன்றம் நோக்கி நடைபெறும் பேரணியை விளக்கி இந்த பிரச்சார இயக்கம் மாவட்டம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தது.  சிவகங்கை ஒன்றியத்தில் நடந்த பிரச்சாரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் விசுவநாதன், சிஐடியூ தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயலாளர் உமாநாத், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் முத்துக்கருப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

Related Stories: