திண்டுக்கல்: திண்டுக்கல் திரு இருதய கல்லூரியில் அரசு போட்டி தேர்வு மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. திரு இருதய கலை கல்லூரி மற்றும் வெற்றி தமிழா அமைப்பு இணைந்து நடத்திய இம்முகாமிற்கு செய்தி மக்கள் தொடர்பு அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் பழனிச்சாமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் இன்னாசிமுத்து வரவேற்புரை நிகழ்த்தினார். இந்திய தோல் ஏற்றுமதி கழக செயல் இயக்குனர் செல்வம், திருச்சி மண்டல தலைமை அஞ்சல் துறை தலைவர் கோவிந்தராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: மாநில, மத்திய அரசின் அரசு வேலை வாய்ப்புக்கான போட்டி தேர்வுகளில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவர்களும் ஒரு குறிக்கோளுடன் போட்டி தேர்வுக்கு படிக்க வேண்டும்.
