மாசி மக பெருவிழாவையொட்டி வேதாரண்யேஸ்வரர் கோயிலில் தெப்ப திருவிழா

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வர் கோயிலில் மாசிமகப் பெரு விழாவையொட்டி கல்யாணசுந்தரர் எழுந்தருளிய தெப்பத்திருவிழா நடைபெற்றது. வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா கடந்த மாதம் 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தெப்பத்திருவிழா கோயில் வளாகத்துக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்த குளத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மீனாட்சி அம்மன் உடன் கல்யாணசுந்தரர் சுவாமி எழுந்தருளிய தெப்பத் திருவிழா மங்கள இசை முழங்க சிறப்பாக நடைபெற்றது. தெப்ப திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தெப்பத்திருவிழாவை கண்டுகளித்து சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை வேதாரண்யம் வர்த்தக சங்கத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: