பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் அமைக்கப்பட்ட நூலகங்கள் திறப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் முழுவதும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அரசுப் பள்ளிகளில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட மகாத்மா காந்தி நூலகங்களை திறந்து வைத்தார்.

சிவகங்கை நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நூலகங்களை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை) சண்முகநாதன், காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரெத்தினம், மாவட்ட துணைத் தலைவர் சண்முகராஜன், மகளிர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவி வித்யாகணபதி, நகர்மன்ற கவுன்சிலர்கள் மகேஸ்குமார், விஜயகுமார், நிர்வாகிகள் சிதம்பரம், வெள்ளைச்சாமி, மோகன்ராஜ், உடையார் மற்றும் தலைமையாசிரியை அமிர்தவாணி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இது போல் மாவட்டத்தில் மேலும் 10 அரசுப்பள்ளிகளில் அமைக்கப்பட்ட நூலகங்களையும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திறந்து வைத்தார்.

Related Stories: