மதுரை: ஜெயலலிதா பற்றி பிரதமர் மோடிக்கு தெரியும், ஆனால் உனக்கு தெரியுமா என அண்ணாமலையிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை கீரைத்துறையில் நேற்று அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் ஜெயபாலன் தலமை வகித்தார். இதில், மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ பேசுகையில், ஜெயலலிதா என்றால் சும்மா இல்லடா, அவரை பற்றி பிரதமர் மோடிக்கு நன்றாக தெரியும், உனக்கு (அண்ணாமலைக்கு) தெரியுமா? அவருடைய தைரியும் இந்தியாவில் யாருக்கும் வராது. அவரை யாருடனும் ஒப்பிட்டு பேச அருகதையில்லை. நாங்கள் அவரின் பக்தர்கள்.
