நடுநாலுமூலைக்கிணறு தொடக்கப்பள்ளியில் ரூ.12.84 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

திருச்செந்தூர், மார்ச் 10: நடுநாலுமூலைக்கிணறு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.12.84 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். திருச்செந்தூர் அருகே உள்ள மேல திருச்செந்தூர் பஞ்சாயத்து நடுநாலுமூலைக்கிணறு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.12 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

விழாவில் மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், திருச்செந்தூர் ஆர்டிஓ புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், ஒன்றிய ஆணையாளர் பொங்கலரசி, மேல திருச்செந்தூர் பஞ். தலைவர் மகாராஜன், ஊர் தலைவர் வழக்கறிஞர் சுப்பிரமணியன், முக்காணி கூட்டுறவு சங்க தலைவர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமெஜயம், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் வாள்சுடலை, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் தமிழழகன், திமுக மாவட்ட துணை அமைப்பாளர் வீரமணி, கிளை செயலாளர் தர்மராஜ், பள்ளி ஆசிரியர் பேச்சிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: