நாகப்பட்டினம் நம்பியார் நகரில் ரூ.34 கோடியில் கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகம்

நாகப்பட்டினம், மார்ச் 10: நாகப்பட்டினம் நம்பியார் நகரில் ரூ.34 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சிறிய மீன்பிடி துறைமுகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். நாகப்பட்டினம் நம்பியார் நகரில் 6 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். நம்பியார் நகரில் மீன்பிடித்தல் பிராதன தொழிலாக உள்ளது. இந்த பகுதியில் 69 விசைப்படகுகள், 423 சிறிய படகுகள் உள்ளது. இதனால் இப்பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைத்து தர வேண்டும் என நம்பியர் நகர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் நம்பியார் நகர் மீனவ மக்கள் ரூ.11.43 கோடி அளித்தனர். ரூ.22.87 கோடி அரசு அளித்தனர். ஆக மொத்தம் ரூ.34.30 கோடி மதிப்பில் துறைமுகம் அமைக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட மீன்பிடி துறைமுகத்தை சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

இதை தொடர்ந்து நம்பியார் நகரில் பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் கூடுதல் கலெக்டர் ப்ரித்விராஜ் குத்துவிளக்கேற்றினார். பின்னர் துறைமுகத்தை திறந்து வைத்தார். நகர்மன்ற துணைத்தலைவர் செந்தில்குமார், திமுக மாவட்ட பொருளாளர் லோகநாதன், கவுன்சிலர்கள் சுரேஷ், முகுந்தன், அமானுல்லா, ஜோதிலட்சுமி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, உதவி இயக்குநர் ஜெயராஜ், உதவி செயற் பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: