எஸ்.டி.பி.ஐ.செயற்குழு கூட்டம்

போடி: போடி புதூரில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக் தலைமையில் நடந்தது.  இதில் மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக் அலி, மாவட்ட பொருளாளர் முகமது பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜாவித் அகமது வரவேற்றார். கூட்டத்தில், போடி அரசு பொது மருத்துவமனைக்கு ரத்த வங்கி அமைக்கும் பணியினை விரைவு படுத்த வேண்டும். தேனி அரசு மருத்துவ  கல்லூரி மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க  வேண்டும். வளாகத்தில் அடிக்கடி தூய்மை செய்ய வேண்டும் உள்ளட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேக்பரீத், கம்பம் சட்டமன்ற தொகுதி தலைவர் தாவூத் நிஸார், போடி சட்டமன்ற தொகுதி தலைவர் அப்துல் லத்திப் என பலரும் கலந்து கொண்டனர். நகர செயலாளர் முகமது ஆரிப் ஏற்பாடு செய்திருந்தார். முடிவில் மாவட்ட செயலாளர் ஜெய்னுலாபுதீன் நன்றி கூறினார்.

Related Stories: