தாயமங்கலம் கோயிலில் பங்குனி திருவிழா

இளையான்குடி: தாயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருந்திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பங்குனி திருவிழா வரும் 29ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப்.5ம் தேதி பொங்கல் வைபவம், ஏப்.6ம் தேதி அலங்கார தீப தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு ஏப்.5 மற்றும் 6ம் தேதிகளில் மதுரை, காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, பரமக்குடி, காளையார்கோவில் உள்ளிட்ட நகரங்களில் இருந்து தாயமங்கலத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என கோயில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செட்டியார் தெரிவித்துள்ளார்.

Related Stories: