ஆத்தூர் யூனியன் கூட்டம்

நிலக்கோட்டை: ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுவின் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமை வகித்தார். துணைதலைவர் ஹேமலதா மணிகண்டன் முன்னிலை வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, ஏழுமலையான் (கி.ஊ) வரவேற்றனர். கூட்டத்தில் கோடையை சமாளிக்க முன்னெச்சரிக்கை பணிகளை முனைப்புடன் செய்து மாவட்டத்தில் முன்மாதிரி ஒன்றியமாக திகழ வேண்டும். சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். கூட்டத்தில் கவுன்சிலர்கள், மஸ்தூர் பணியாளர்களுக்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து வழங்கப்படும் சம்பளத்தை முறைப்படுத்த வேண்டும். தேவரப்பன்பட்டியிலுள்ள மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதில் கவுன்சிலர்கள் பாப்பாத்தி, காணிக்கைச்சாமி, செல்வி, சாதிக், அழகு சரவணகுமார், நாகவள்ளி, ராஜலட்சுமி மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய மேலாளர் முருகன் நன்றி கூறினார்.

Related Stories: