நகராட்சி பள்ளி ஆண்டு விழா

நெல்லை,மார்ச் 9:  நெல்லை டவுன் பாரதியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி  ஆண்டு விழா நடந்தது. விழாவுக்கு கவுன்சிலர் சந்திரசேகர் தலைமை வகித்தார். பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் அங்கயற்கண்ணி வரவேற்றார். பட்டதாரி ஆசிரியை புஷ்பவள்ளி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கவுன்சிலர் சந்திரசேகர் பரிசுகள் வழங்கி,  மகளிர் தினத்தையொட்டி பள்ளி ஆசிரியைகளுக்கு பொன்னாடை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். அங்கன்வாடி அமைப்பாளர் மீனாட்சி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியை ஆசிரியை மீனாட்சி, பட்டதாரி ஆசிரியைகள் அனுசுயா, இறைமொழி, சங்கீதா, இடைநிலை ஆசிரியைகள் ராஜலட்சுமி ஆகியோர் தொகுத்து வழங்கினர். ஆசிரியை கோயில் பிச்சை விஜயா நன்றி கூறினார்.

Related Stories: