அண்ணாமலை பல்கலையில் கருத்தரங்கம்

சிதம்பரம், மார்ச் 8: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கணிதத்துறையில், சீனிவாச ராமானுஜரின் நினைவாக கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கணிதத்துறை தலைவர் ராம் தலைமை தாங்கினார். வருகைப்புரிந்த அனைவரையும்  பேராசிரியர்  சம்பத்குமார் வரவேற்றார். விழாவிற்கு பதிவாளர்  சீத்தாராமன்  தொடக்க உரையாற்றினார். அறிவியல் புல முதல்வர் ராமசாமி வாழ்த்துரை  வழங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், கணிதத்துறையில் சிஎஸ்ஐஆர்  அறிவியல் ஆய்வாளர் தமிழ்செல்வம், அண்ணா பல்கலைக்கழகத்தின் கணிதத்துறை  அறிவுடைநம்பி ஆகியோர் கலந்துகொண்டு, கணிதத்தில் உள்ள முக்கிய தலைப்புகளில் சிறப்புரை ஆற்றினார்கள். அதனைத் தொடர்ந்து தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.  விழாவில் கல்வியியல் புல முதல்வர் குலசேகர பெருமாள் பிள்ளை மற்றும் கணிதத்துறை பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். பேராசிரியர் கல்யாணராமன் நன்றி கூறினார்.

Related Stories: