தூத்துக்குடி பிஷப் கால்டுவெல் கல்லூரியில் பாரத சாரண, சாரணிய இயக்க சிந்தனை நாள் விழா போட்டிகள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் சார்பில் சிந்தனை நாள் விழா பேரணி மற்றும் போட்டியானது மறவன்மடம் பிஷப் கால்டுவெல் கல்லூரியில் நடைபெற்றது. போட்டிகளை மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பிரபாகுமார் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற பேரணியில், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம், தலைமையாசிரியர்கள் மரியஜோசப் அந்தோணி, தவமணிதேவி, ஜாய்பெல், பி.எம்.சி. மெட்ரிக் பள்ளி தாளாளர் ஜோசப் ஜான்கென்னடி, நீம் பவுண்டேஷன் நிறுவனர் லூயிஸ் ராஜ்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

சாரணர் பிரிவில் சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதலிடமும், ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2வது இடமும், சாரணியர் பிரிவில் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 2வது இடமும் பெற்றனர். தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்சன், பிஷப் கால்டுவெல் கல்லூரி தாளாளர் எபனேசர் மங்களராஜ், திருமண்டல உயர்நிலை, மேல்நிலை மற்றும் சிறப்பு பள்ளிகள் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங், ஜான்தி பாப்திஸ்ட் பள்ளி தாளாளர் செந்தூர்மணி, ஸ்டார் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜாய்விக்டோரியா, தொழிலதிபர் ஜெயரட்சகர் ஆகியோர் பரிசு வழங்கினர். ஏற்பாடுகளை மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எட்வர்ட் ஜான்சன்பால், திருச்செந்தூர் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் பயிற்சியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories: