பொய்கைகரைப்பட்டியில் அழகர்கோவில் மாசி தெப்ப உற்சவம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

அழகர்கோவில், மார்ச். 8: மதுரை அருகே பொய்கைகரைப்பட்டியில் அழகர்கோவில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதுரையை அருகே உள்ள அழகர்கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில் சித்திரை திருவிழாவிற்கு அடுத்ததாக மாசி மாதம் பவுர்ணமி நாளில் நடைபெறும் தெப்ப திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு மாசி மக தெப்பத்திருவிழா நேற்று முன் தினம் தொடங்கியது. அதனை தொடர்ந்து இரவு கஜேந்திர மோட்சம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நேற்று காலையில் நடைபெற்றது. தேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் பல்லக்கில் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் பொய்கைகரைப்பட்டியில் உள்ள தெப்பத்திற்கு புறப்பட்டு சென்றார். காலை 10.50 மணியளவில் தெப்பக்குளத்தில் அமைத்திருந்த அன்னப்பறவை அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் சுவாமி தேவியர்களுடன் எழுந்தருளி தெப்பத்தினை இருமுறை வலம் வந்தார்.

Related Stories: