மக்கள் குறைதீர் கூட்டத்தில் சுயதொழில் செய்ய மனு அளித்தவருக்கு உடனடியாக தையல் இயந்திரம் வழங்கல்: கலெக்டர் நடவடிக்கை

விருதுநகர், மார்ச் 7: மக்கள் குறைதீர் கூட்டத்தில் சுயதொழில் செய்ய தையல் இயந்திரம் கேட்டு மனு அளித்தவருக்கு உடனடியாக தையல் இயந்திரத்தை கலெக்டர் வழங்கினார்.

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ரேசன்கார்டு, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை கோரி பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களை துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் திருச்சுழியை சேர்ந்த சோனைபாண்டி, சுயதொழில் செய்ய தையல் இயந்திரம் கோரி மனு அளித்தார். உடனடியாக சமூக நலத்துறை மூலம் இலவச தையல் இயந்திரம் வழங்கினார். நிகழ்ச்சியில் டிஆர்ஓ ரவிக்குமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: