திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (45). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஆறுமுகம் (40). இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டருகே நின்ற முருகேசனை, ஆறுமுகம் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பியோடி விட்டார்.
