தருவைகுளம் பகுதியில் கால்நடை தீவனமான கோபுல்லை இயற்கை முறையில் வளர்க்க முடிவு மேயர் ஜெகன்பெரியசாமி தகவல்

தூத்துக்குடி, மார்ச் 7: தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது: மாநகர மேயராக   பொறுப்பேற்று கடந்த ஓராண்டில் பல்வேறு   முன்னேற்றங்களை மாநகருக்கு செய்திருந்தாலும் பசுமைமிகு மாநகரமாக    மாற்றுவதையே தலையாய கடமையாக கொண்டுள்ளேன். இதன் ஒரு பகுதியாக  மாமன்ற கூட்டத்தில்  தமிழ்நாடு முதலமைச்சர்   மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா மற்றும் மாநகர மேயராக பதவியேற்ற   ஓராண்டை முன்னிட்டு 70,000 மரக்கன்றுகள் நடப்படும்   என்று அறிவித்ததின்படி முதற்கட்டமாக 12000 மரங்கள் நடும் பணி   தருவைகுளத்தில் உள்ள குப்பை மற்றும் உரக் கிடங்கில் நடைபெற்றது. அப்பகுதியில் அமைந்துள்ள 28 எம்எல்டி கொள்ளளவு கொண்ட பாதாளச் சாக்கடை சுத்திகரிப்பு   நிலையத்தில் 10எம்எல்டி நீரானது நாள் ஒன்றுக்கு கிடைக்கிறது. எனவே   அப்பகுதியில் புளிய மரங்கள் மற்றும் தீவனத்திற்கு தேவையான கோ புல்லை   இயற்கையான முறையில் வளர்க்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது   மேற்கூறிய எண்ணிக்கையிலான மரங்களை தவிர்த்து  60000 புதிய மரங்களை அப்பகுதியில் வனத்துறையினர் மற்றும் விமான நிலைய ஆணையத்தினருடன் இணைந்து   நடவும் முடிவு செய்துள்ளோம். மாநகரில் மேலும் பல பணிகளை சிறப்பாக செய்ய உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

Related Stories: