தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மேலாண்மை மற்றும் பயிற்சி வேலைவாய்ப்பு துறை செய்திக்குறிப்பு: சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் உள்ள மேலாண்மை துறையின் வெள்ளி விழா (25 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டங்களின்) ஒரு பகுதியாக நேற்று தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக வளாகத்தில் காலை 8 மணி முதல் மதியம் 3.30 மணி வரை சாஸ்த்ரா பல்கலைக்கழக மேலாண்மைத் துறை மற்றும் EQUITAS அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 55 நிறுவனங்கள் பங்கேற்றன. சாஸ்த்ரா மேலாண்மை துறை மற்றும் பயிற்சி வேலைவாய்ப்பு துறை டீன் டாக்டர் பத்ரிநாத் மற்றும் EQUITAS அறக்கட்டளை நிறுவன அதிகாரிகள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். இம்முகாமில் 2743 பேர் பங்கேற்றனர். நிறைவில் 596 பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும் சுமார் 992 விண்ணப்பதாரர்கள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர் என்றும் மேலாண்மைத்துறை டீன் டாக்டர் வெ பத்ரிநாத் கூறினார்.

Related Stories: